இந்தியாவில் கொரோனா பாதிப்பு 13 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியது.

டெல்லி, ஜூலை-25

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,36,861-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 48,916 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 31,358 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 754 உயிரிழந்துள்ளனர். இதுவரை 8,49,432 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 32,224 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,56,071 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 3,57,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13,132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,99,967 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,99,749 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3,320 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,28,389 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,777 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,10,931 பேர் குணமடைந்துள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *