ஜெ., நினைவு இல்லம்.. நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகை ரூ.68.9 கோடியை செலுத்தியது தமிழக அரசு..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடாக தமிழக அரசு ரூ.68.9 கோடியை செலுத்தியுள்ளது.

சென்னை, ஜூலை-25

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது.

24,322 சதுர அடி பரப்பளவு கொண்ட வேதா நிலையத்துக்கு இழப்பீடாக ரூ.68.9 கோடியை தமிழக அரசு நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது.

மேலும் ஜெயலலிதா செலுத்தாமல் இருக்கும் வருமான வரி பாக்கி ரூ.36.9 கோடியை செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *