புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா..!
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஜெயபாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஜூலை-25

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 2,513 ஆகவும், பலி எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கதிர்காமம் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபாலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரில் 3 நாட்கள் பேரவை நிகழ்வுகளில் ஜெயபால் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.