கோவையில் நாளை முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு

கோவையில் நாளை முதல் வரும் 27ந்தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜூலை-24

.

தமிழகத்தில் இன்று 2வது நாளாக கொரோனா பாதிப்பு ஆறு ஆயிரத்தைக் கடந்துவிட்ட நிலையில், கோவையில் இன்று புதிதாக 189 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவையில் நாளை முதல் வரும் 27ந்தேதி வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவையில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாளை மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கொரேனா பரவலைத் தடுக்க மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *