கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் குறைவு.. ஹர்ஷ் வர்தன்

உலகிலேயே இந்தியாவில் தான் குறைவான கொரோனா உயிரிழப்பு ஏற்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, ஜூலை-24

டெல்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது ;-

நாட்டில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12.5 லட்சத்தை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 63.45% ஆகவும், உயிரிழப்பு விகிதம் 2.3% ஆகவும் உள்ளது.

உலகிலேயே ஒரு லட்சம் பேரில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கொரோனா பாதித்து பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் குறைவாக உள்ளது

இதுவரை நாட்டில் 1 கோடியே 5 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது நாள் ஒன்றுக்கு நாடு முழுவதும் 3.5 லட்சம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆனால், தொடர்ந்து கொரோனா பரிசோதனை உயர்த்தி, நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகளை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *