#Thalaivar168, ரஜினியின் அடுத்த படம் அறிவிப்பு

சென்னை, அக்டோபர்-11

இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தனது அடுத்த படத்துக்கான கதைகளை கேட்டு வந்த ரஜினிகாந்த், இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும், கிராமப்புறத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது அந்த செய்தி உறுதியாகியுள்ளது. எந்திரன், பேட்ட படங்களுக்கு பிறகு ரஜினி படத்தை தயாரிக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ரஜினியின் 168-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் #Thalaivar168 என்ற ஹேஸ்டாக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஒரு சிலர் தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் அரசியலுக்கு எப்போது முழுமையாக வருவது எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *