ஆகஸ்ட் 3 முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என வெளியான செய்தி தவறு.. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை-24

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வழக்கமாக ஜூன் மாதத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கொரோனா தொற்றால் பள்ளிகள் தற்போது திறக்கப்படும் சாத்தியமில்லை என பள்ளிக்கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என்றும் தற்போதைய சூழலில் மாணவர் சேர்க்கை நடத்துவது பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் உள்ளது, பொதுத்தேர்வுகள் முடிந்த பின்னரே, புதிய தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதி மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *