தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா..!

தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி, ஜூலை-23

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். மேலும் கீதா ஜீவனின் மகள் மற்றும் மருமகனுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து அவர்களும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டனர்.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *