நகை வாங்குவதை மறந்துட வேண்டியதுதான்.. சவரன் ரூ.39,000ஐ நெருங்கியது..!!

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,776-க்கு விற்பனையாகிறது.

சென்னை, ஜூலை-23

கொரோனா காலத்திலும் தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.38,776-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.74 உயர்ந்து ரூ.4,847-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.50 அதிகரித்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை சவரன் ரூ.39,000ஐ நெருங்குவதால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் சவரன் ரூ.39,000ஐ தாண்டும் எனவும், தீபாவளிக்குள் ரூ.40,000ஐ எட்ட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா காலகட்டத்தில் தள்ளி வைக்கப்பட்ட திருமணங்களை தற்போது ஊரடங்கு தளர்வால் மீண்டும் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்குவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *