தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது..!

தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. கொரோனா தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-23

கொரோனாவை தடுக்க உருவாக்கப்பட்டுள்ள கோவாக்சின் என்ற தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தின் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா உட்பட நாடு முழுவதும் சுமார் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. டெல்லி மற்றும் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ‘கோவாக்சின்’ பரிசோதனை தொடங்கிவிட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை இன்று தொடங்கியது. சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து பரிசோதனை தொடங்கியது. தன்னார்வலர்கள் 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

இது குறித்து பேட்டியளித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் ‘ கொரோனா தடுப்பூசி கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர். கொரோனா தடுப்பூசி கோவாக்சின் பரிசோதனை சுமார் 6 மாதம் வரை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *