சபாநாயகர் கோரிக்கை நிராகரிப்பு..சச்சின் பைலட் விவகாரத்தில் ராஜஸ்தான் ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி..!

சச்சின் பைலட் விவகாரத்தில் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் நாளை உத்தரவை பிறப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, ஜூலை-23

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏ.-க்கள் போர்க்கொடி தூக்கினார். அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் அந்த 19 பேரும் பங்கேற்கவில்லை. இதனால் சச்சின் பைலட் மற்றும் இரண்டு பேரின் மந்திரி பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

சபாநாயகர் நோட்டீஸை எதிர்த்து பைலட் உள்பட 19 பேரும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடினர். வழக்கை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் வரும் 24-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். 18 எம்எல்ஏக்கள் மீது ஜூலை 24-ம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனக்கூறி விசாரணையை வரும் 24ம் (நாளை) தேதிக்கு ஒத்தி வைத்தது.

இதனையடுத்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சட்ட விரோதமானது என்றும், மூர்கத்தனமானது என்றும், சபாநாயகரின் அதிகாரத்தை குறைக்கும் எனக்கூறி ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை ரத்து செய்யக்கோரி சபாநாயகர் கோஷி நேற்று உச்சநீதிமன்றத்தில மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், சபாநாயகர் கோஷி கோரிக்கையை நிராகரித்துள்ளது. மேலும், திட்டமிட்டபடி ராஜஸ்தான் நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *