16 தொழில் நிறுவனங்கள் ரூ.5,137 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் துவங்கிட முதல்வர் முன்னிலையில் கையெழுத்து..!

சென்னை, ஜூலை-23

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் தமிழக முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (23.7.2020) தலைமைச் செயலகத்தில், தொழில் துறை சார்பில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் 16 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 5,137 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் துவங்கிட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது, 16 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் பழனிசாமி முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்கள் மூலம், 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தற்போது நிலவிவரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 16 திட்டங்களில், 6 திட்டங்களுக்கு நேரடியாகவும், 10 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரியில், 2300 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Adani Enterprises Limited நிறுவனத்தின், தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் – வடகால் தொழிற்பூங்காவில், Super Auto Forge நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 800 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், Forged steel and Aluminium parts உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

காஞ்சிபுரம் மாவட்டம், சிப்காட் வல்லம் – வடகால் தொழிற்பூங்காவில் உள்ள, Airflow Equipments நிறுவனம், 320 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், போக்குவரத்து உபகரணங்கள் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். மின்சார பைக்குகள் (E-Bike) உற்பத்தி செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் என மொத்தம், 16 திட்டங்களின் மூலம், தமிழ்நாட்டிற்கு 5,137 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, சுமார் 6,555 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி, தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்தின் investingintamilnadu.com என்ற புதிய இணையதளத்தினை துவக்கி வைத்தார். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பினை முற்றிலும் பூர்த்தி செய்திடும் வகையில், துறைசார் கவனம், மண்டல தொலைதொடர் திட்டம், ஏற்றுமதி மேம்பாடு போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கி, இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *