மாஸ்க் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்…ஜார்க்கண்ட் அரசு அதிரடி..
ராஞ்சி, ஜூலை-23

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து, 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் அமைச்சரவை கூட்டம் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில், பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள், பொது இடத்தில் எச்சில் துப்புவது போன்ற கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதமும், 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதுவரை 6485 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 64 பேர் உயிரிழந்த நிலையில், 3024 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3397 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.