டிவி மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு.. அமைச்சர் செங்கோட்டையன்

14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, ஜூலை-23

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திக்கடவு – அவிநாசி திட்டப்பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. 14 தொலைக்காட்சிகளின் மூலம் ஆகஸ்ட் 1 முதல் வகுப்பு வாரியாக பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக தொலைக்காட்சிகள் மூலம் பாடம் நடத்தும் முதல் மாநிலம் தமிழகம்தான். பள்ளி பாடத்திட்டங்கள் குறித்த 18 போ் கொண்ட குழுவின் அறிக்கையை செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். பள்ளி திறப்பு, பாடங்கள் குறைப்பு குறித்து பரிசீலைனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *