காவேரி டிவியை வாங்கி மய்யம் என்ற பெயரில் நடத்த கமல் திட்டம்

சென்னை ஆகஸ்ட் 31

மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமது கட்சியின் கொள்கைகளையும் செய்திகளையும் பரப்புவதற்காக ,சென்னையில் இயங்கி வரும் காவேரி தொலைக்காட்சியை வாங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது

தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களுக்காக தனியாக செயற்கைக்கோள் தொலைக்காட்சி நடத்தி வருகின்றன. திமுகவுக்கு கலைஞர் டிவியும்,அதிமுகவுக்கு நியூஸ் ஜே டிவியும், காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் வசந்த் டிவி,மெஹா டிவியும்,பாமகவுக்கு மக்கள் டிவியும்,தேமுதிகவுக்கு கேப்டன் டிவியும்,மதிமுக ஆதரவு நிலைப்பாட்டுடன் மதிமுகம் டிவியும், பாஜக ஆதரவு நிலைப்பாட்டுடன் லோட்டஸ் டிவி,வின்டிவியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெளிச்சம் டிவியும்,நாம் தமிழர் கட்சி ஆதரவு நிலைப்பாட்டுடன் தமிழன் டிவியும்,அமமுகவுக்கு ஜெயா டிவியும்,பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு வேந்தர் டிவியும் இயங்கி வருகிறது.

இந்த ஊடகங்கள் மூலம் தங்களையும் தங்களது கட்சி செய்திகளையும் மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.இதனால் தமிழக மக்களும் எந்த டிவியில் யார் செய்தி யாருக்காக ஒளிபரப்பாகிறது என்பதை புரிந்துவைத்துள்ளார்கள்.

இந்த சூழ்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் வியூகம் அமைப்பாளர் பிரஷாந்த் கிஷோர்,மற்ற தொலைக்காட்சிகள் கமலின் செய்திகளை இருட்டடிப்பு செய்வதால்,தனியாக டிவி தொடங்கும் படி பரிந்துரைத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட கமல், புதிதாக டிவி தொடங்கலாமா அல்லது ஏற்கனவே இருக்கும் டிவியை வாங்கலாமா என்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கிவரும் காவேரி டிவி பற்றி கமலுக்கு சிலர் தெரிவித்து இருக்கிறார்கள்.நிதி நெருக்கடியால் அந்த டிவி முடக்கப்பட்ட கதை பற்றி அறிந்த கமல், அந்த டிவியை வாங்கி மய்யம் என்ற பெயரில் நடத்தலாமா என்று தமக்கு தெரிந்தவர்களிடம் கலந்தாலோசித்து வருகிறார்.அவருக்கு வேண்டியவர்கள் தனியாக டிவி நடத்தினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து எடுத்துரைத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *