தமிழகத்தில் புது உச்சம்.. ஒரே நாளில் 5,849 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,86,492-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, ஜூலை-22

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,849 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,31,583 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 4,910 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 3,144- ஆக உயர்ந்துள்ளது.
  • மார்ச் 1 முதல் சென்னையில் விடுபட்ட மேலும் 444 பேரின் உயிரிழப்பு கொரோனா உயிரிழப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று 74 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,171 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 113 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 51,765 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 20,15,147 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 57.99% ஆக உள்ளது.
  • தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 60,112 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 5,849 பேருக்கு தொற்று உறுதியானது.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,13,319 ஆண்கள், 73,150 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *