தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை.. அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தில் தற்போது திரையரங்குகளை திறக்க வாய்ப்பு இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவில்பட்டி, ஜூலை-22

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு அமர்ந்து படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *