2-வது டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால் சதம்…

புனே, அக்டோபர்-10

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் விளாசினார். 

தென்னாப்பிரிக்கா அணி உடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதை அடுத்து ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ரோகித் சர்மா 14 ரன்னில் ஆட்டமிழக்க, மயங்க் அகர்வாலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். அரை சதம் கடந்த புஜாரா, ரபாடாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். அவருடன் சேர்ந்து பொறுமையாக ஆடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். 108 ரன்கள் எடுத்திருந்த அவரையும் ரபாடா அவுட்டாக்கினார். முதலாவது டெஸ்ட் போட்டியிலும் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *