கந்தனுக்கு அரோகரா…எல்லா மதமும் சம்மதமே…: கறுப்பர் கூட்டத்துக்கு ரஜினிகாந்த் கண்டனம்..!

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-22

இதுதொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த, இந்த ஈனச் செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

எல்லா மதமும் சம்மதமே!!! கந்தனுக்கு அரோகரா!!!

இவ்வாறு ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *