ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்த ஆ.ராசா.. போட்டோஷாப் செய்ததால் நெட்டிசன்கள் கலாய்..!
மின் கட்டண உயர்வுக்கு எதிராக திமுக அறிவித்த போராட்டத்தில் ஈடுபடாமலேயே கலந்து கொண்டதாக மார்பிங் செய்யப்பட்ட தனது புகைப்படத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பியுமான ஆ.ராசா சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சென்னை, ஜூலை-22

சாத்தான்குளத்தில் காவலர்களால் தாக்கப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்டதை கண்டித்து கடந்த மாதம் 30ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திமுகவினர் வீடுகளுக்கு முன் பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த போரட்டத்தில் பதாகையை ஏந்தி நின்ற புகைப்படத்தை ஆ.ராசா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
நேற்று மின்சார கட்டணத்தை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது திமுகவினர் தங்களது வீட்டுக்கு முன் நின்று பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்தப்போராட்டத்திலும் பதாகையை ஏந்தி நின்ற புகைப்படத்தை ஆ.ராசா வெளியிட்டு இருந்தார். ஆனால் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை மார்பிங் செய்து பதாகையை மட்டும் மாற்றிய புகைப்படத்தை ஆ.ராசா வெளியிட்டுள்ளார்.
மோசமான போட்டோசாப் செய்து மாட்டி கொண்ட திமுக ஆ.ராசா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.