ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா..!
ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர், ஜூலை-22

தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுவரை அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூா், ராணிபேட்டை தொகுதி திமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தற்போது தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.