பெண்கள் ராணுவத்தில் சேரலாம்…சவுதி அரசு அறிவிப்பு

அக்டோபர்-10

ராணுவம், கடற்படை, விமானப் படைகளில் பெண்களும் சேரலாம் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான், பெண்களின் உரிமைகளை விரிவுபடுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் வாகனங்கள் ஓட்டுவதற்கு இருந்த தடை கடந்த ஆண்டு விலக்கப்பட்டது. இந்நிலையில், ராணுவம், கடற்படை, விமானப்படைகளிலும் பெண்கள் சேரலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பெண்களுக்கு அதிகாரமளிக்கும் அடுத்த நடவடிக்கை என சவுதி வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், சவுதி அரேபியாவில் பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *