இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 28,732 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

டெல்லி, ஜூலை-22

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,724 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர். 648 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இதுவரை 11,92,915 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,11,133 பேர் சிகிச்சை பெற்ற வரும் நிலையில் 7,53,050 பேர் குணமடைந்துள்ளனர். 28,732 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் 3,27,031 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,82,217 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,276 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் 1,31,636 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் 51,351 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் 1,25,096 பேரும், உத்தர பிரதேசத்தில் 53,288 பேரும், கர்நாடகாவில் 71,069 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *