அமர்நாத் யாத்திரை ரத்து.. காஷ்மீர் அரசு அறிவிப்பு

2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

ஸ்ரீநகர், ஜூலை-21

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த நாட்களில் யாத்திரியை தொடங்க முடியவில்லை. ஆகஸ்ட் 5-ந்தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். அதற்குள் சாத்தியமில்லை என்பதால் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் அரசின் ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

‘‘சூழ்நிலை, ஸ்ரீஅமர்நாத் கோவில் போர்டு கூட்டத்தின் முடிவு அடிப்படையில், இந்த வருட யாத்திரியை ரத்து செய்யப்படுகிறது என்பதை வருத்துத்துடன் அறிவிக்கிறோம். காலை மற்றும் மாலை ஆரத்தி பூஜை டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பப்படும்’’ என்று ஜம்மு-காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *