உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 6.13 லட்சத்தை தாண்டியது..!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 6 லட்சத்து 13 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜூலை-21

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கண்டறியப்பட்டு தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 613,146 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14,851,246 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 8,906,297 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,814 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 143,834 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,961,429 ஆக அதிகரித்துள்ளது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.