இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை-கிருஷ்ணசாமி

சென்னை, அக்டோபர்-10

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து, அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் உயர்மட்டக்குழுகூடி ஆலோசித்தது. இதில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுகவுக்கு புதிய தமிழகம் சார்பில் ஆறு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குள வேளாளர் என்று இணைத்து அரசாணை வெளியிடவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை, அதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட்டோம். இதனால், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கூறினார். புதிய தமிழகம் கட்சியின் கோரிக்கைகளை உறுதியளித்து அரசாணை வெளியிடும் வரை அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *