இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,148 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 11.5 லட்சத்தை தாண்டியது.

டெல்லி, ஜூலை-21

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.உத்தரப் பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்க மாநிலங்களில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இந்த மாதம் தொடங்கியதில் இருந்து இந்த மாநிலங்களில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனால், இம்மாநில அரசுகள் கவலை அடைந்துள்ளன.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று முதன்முறையாக 40 ஆயிரத்தை தாண்டியது. இன்று 37,148 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 11,55,191 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 28,084 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7,24,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4,02,529 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,18,695 பேரும், தமிழகத்தில் 1,75,678 பேரும், டெல்லியில் 1,23,747 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *