#LionInLamborghini.. ரஜினி கார் ஓட்டுவதை ட்ரண்ட் செய்த ரசிகர்கள்..!

முகக் கவசம் அணிந்தபடி, லம்போஹினி சொகுசு காரை நடிகர் ரஜினிகாந்த் ஓட்டி செல்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

சென்னை, ஜூலை-21

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் ரஜினி என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் அவருடைய ரசிகர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக ‘அண்ணாத்த’ சினிமா படப்பிடிப்பில் பங்கேற்காமல் இருந்துவரும் ரஜினி, கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் லம்போஹினி காரில் அமர்ந்து, தானே அதை ஓட்டிச் செல்வது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வரைலாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி காரை ஓட்டுகிறார் ரஜினி. இதனையடுத்து #LionInLamborghini என்ற ஹாஷ்டேக்கை அவருடைய ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *