கருப்பர் கூட்டத்துக்கு சரத்குமார் எச்சரிக்கை

சென்னை, ஜூலை-21

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர் கூறியதாவது ;-

எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தற்பொழுது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கோரோனா நோயிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக இந்த 2020ம் ஆண்டை நாம் கடுமையாக போராடி கடக்கவேண்டும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது அவர்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் ஆனால் எதிர்க்கட்சிகள் குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் மேலும் கோரோனாவிற்க்கு சிகிச்சை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது ஆங்கிலத்திற்கு மருத்துவத்திற்கு நாம் எவ்வளவு முன்னுரிமை கொடுக்கிறோமோ அதே போல் சித்த மருத்துவத்திற்கும் நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் ஏனென்றால் அந்த வைத்தியங்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு வைத்தியமாகும்.

ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் வீட்டில் இருப்பது என்பது சாதாரண காரியங்கள் இல்லை ஆனால் நாம் அனைவரும் வீட்டில் விழிப்புடன் இருப்பதை நாம் நம்மளை பாதுகாக்க பாதுகாத்துக் கொள்ள உதவும் அதேபோல் பல்வேறு பிரச்சினைகள் அதாவது மன உளைச்சல்கள் பொருளாதார சிக்கல்கள் என பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கின்றன இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்பதை என்பது என்று நான் கடவுளை பிரார்த்திக்கிறேன். மேலும் கோரோனாவிற்க்கு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது அது கூடிய விரைவில் வெற்றி அடைய செய்து விரைவில் நம் குழுவில் இருந்து மீள வேண்டும்

கருப்பர் கூட்டம் தொடர்பாக நான் சுற்று அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தேன் தற்போதும் நான் கூறுகிறேன் அது என்னவென்றால் இதுபோன்ற சம்பவங்களை வெளியிடப்படும் சமூக வலைதளங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் மேலும் யாராக இருந்தாலும் மற்ற மதத்தினரையும் இல்லை அவர்களை சார்ந்தவர்களும் துன்புறுத்தக்கூடாது அப்படி மீறும் பட்சத்தில் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதே போல் பல்வேறு தன்னார்வலர்களும் அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வந்தார்கள் அவர்களோடு சேர்ந்து சமத்துவ மக்கள் கட்சியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.மேலும் மின்சார கட்டணம் தொடர்பாக மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும்

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *