சீன அதிபரின் வருகையை வெற்றிபெறச் செய்வது நம் கடமை-கமல்

சென்னை, அக்டோபர்-10

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து திடீரென சந்தித்தார். பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

பி.வி.சிந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கமல்ஹாசனை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  கமல் ஒரு நல்ல நடிகர், நல்ல அரசியல் தலைவர் என்பதால் அவரை சந்தித்தேன் என்றார்.

அதனைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன்:-

60 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் தமிழகம் வருவது மகிழ்ச்சியாகவும், வரவேற்கதக்கதாகவும் இருப்பதாக கூறினார். பேனரை எதிர்க்கவில்லை. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம். அனைத்து நல்ல காரியங்களும் அரசால் மட்டுமே நடைபெறுவது இல்லை. சீன அதிபருடனான சந்திப்பை திறமையாக கையாள பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள்.

பேனர் வைக்கக் கூடாது என நான் சொல்ல மாட்டேன். சினிமாவை தொழிலாக கொண்ட நான் அவ்வாறு கூறுவது சரியாக இருக்காது. சட்டப்பூர்வ அனுமதி பெற்ற இடங்களில் பேனர் வைக்கலாம். சீன அதிபரின் வருகையை வெற்றி விழாவாக மாற்றுவது நம் கடமை. இந்திய- சீன நாட்டு தலைவர்கள் மக்கள் நலனுக்காக எடுக்கும் எந்தவொரு முடிவானாலும் அது வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *