திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா

திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர், ஜூலை-18

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மட்டுமல்லாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்தனர்.
தற்போது 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏ மஸ்தானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பின்னர் தொடர் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். முன்னதாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *