தமிழகத்தில் புதிதாக 4,807 பேருக்கு கொரோனா..!

தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1.65 லட்சத்தைக் கடந்துள்ளது.

சென்னை, ஜூலை-18

தமிழகத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் புதிதாக 4,807 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,65,917 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 49,452 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  • தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 1,13,856 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 3,049 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 2,403- ஆக உயர்ந்துள்ளது.
  • தமிழகத்தில் இன்று 88 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி ஒருவர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,219 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 84,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • பிற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 3588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 111 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 49,452 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை 18,79,499 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 94 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.=
  • மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
  • தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 68.70% ஆக உள்ளது.
  • அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
  • இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,00,970 ஆண்கள், 64,721 பெண்கள், 23 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *