லைவில் செய்தி வாசிப்பாளருக்கு பல் உடைந்ததால் அதிர்ச்சி.. வைரலான வீடியோ

தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் செய்தி வாசிப்பாளர் பல் விழுந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிவி, ஜூலை-18

உக்ரேனிய தொலைக்காட்சி ஒன்றில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் மரிச்சா படல்கோ. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் செய்தியை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக அவரது பல் உடைந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் பெரும்பாலானவர்கள் திகைப்படைந்திருப்பார்கள் அல்லது அல்லது சிரிப்பார்கள்.

ஆனால் படல்கோ சிறிதும் பதற்றமடையாமல், கிழே விழுந்த பல்லை புத்திசாலிதனமாக கைகளால் பிடித்ததுடன், தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்தார். அந்த நேரத்தில் எந்த நிகழ்வும் நடக்காதது போல் நடந்து கொண்ட செயல் டுவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *