கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா?.. எச்.ராஜா ஆவேசம்
கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என்று அரசியல் கட்சித்தலைவர்களுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜூலை-18

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் கந்த சஷ்டி கவசத்தை அவமானப்படுத்தி, இந்துக்களின் உணர்வுகளையும் கொச்சபடுத்தி இருப்பதாக அந்த சேனல் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த சேனல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே அந்த சேனல் அந்த வீடியோவை யூ டியூபில் இருந்து நீக்கியது. இந்த வழக்கின் கீழ் இதுவரை செந்தில் வாசன் என்பவரை சென்னை வேளச்சேரியில் போலீசார் கைது செயதனர். இதையடுத்து நேற்று இந்த சேனலைச் சேர்ந்த சுரேந்திரன் புதுச்சேரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தினர். வரும் 30 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்றக் காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் நேற்று கோயம்புத்தூரில் இருக்கும் சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவிச் சாயம் வீசப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்து இருக்கும் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா,பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அனைத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கலுக்கும் ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதில், ”கந்த சஷ்டி கவசத்தை ஈ.வெ.ரா. கும்பல் அவமதித்த போது ஏன் இவர் துடிக்க வில்லை. இவர் ஒரு கலப்படமற்ற இந்து விரோதி என்கிற காரணத்தால் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த தலைவர்களில் யாராவது கந்த சஷ்டி கவசத்தை இழிவாக பேசிய ஈனப் பிறவிகளை கண்டித்தார்களா? என்றும் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
