ஒரு ராணுவ வீரரின் உயிர் போனால், எதிரிகளின் 10 தலை உருளும்-அமித்ஷா

மகராஷ்டிரா, அக்டோபர்-10

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, அரசியலமைப்பு சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி மாபெரும் பணியை செய்து முடித்திருப்பதாகவும், இதன் மூலம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் ராகுல்காந்தியும், சரத்பவாரும் தங்கள் நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார். பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் தேசிய பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு, ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தால் அதற்கு பதிலாக 10 எதிரிகள் கொல்லப்படுவார்கள் என்பதை ஒட்டுமொத்த உலகமே இப்போது அறிந்திருப்பதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *