இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,38,716 ஆக உயர்வு..!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்து 38 ஆயிரத்தை தாண்டியது.
டெல்லி, ஜூலை-18

நாட்டில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10,38,716 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,884 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 671 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26,273 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6,53,751 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,58,692 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,92,589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,452 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,60,357 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1,60,907 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2315 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,10,807 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 1,20,107 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 3,571 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 99,301 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் 3,58,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.