தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க அனுமதி.. நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் 3தவணைகளாக 75% கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கப்படு வதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.

சென்னை, ஜூலை-17

தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உடனே செலுத்தும்படி பெற்றோர்களை வலியுறுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.

இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த விசாரணை யின்போது,ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க கட்டணம் வசூலிக்கலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “தனியாா் பள்ளிகளில் 75% கல்விக் கட்டணத்தை வசூலிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது தற்போது 25%, பள்ளிகள் திறந்த பிறகு 25%, பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு பிறகு 25% என மூன்று தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு மேலும் 35 சதவீதம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *