வைகைப்புயல் வடிவேலுக்கு பிறந்தநாள்!!!

அக்டோபர்-10

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவரின் உடல் மொழி அசைவையும், பேச்சையும் கண்டு அசராதவர்கள் இல்லை. பல படங்களில் தன்னையே அசிங்கப்படுத்தி நகைச்சுச்வை மூலம் கருத்து கூறியவர் வடிவேலு.

சிறு வயது குழந்தை முதல் பல்லு போன கிளவி வரை வடிவேலுவின் காமெடியை பார்த்து சிரிப்பார்கள். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடித்துள்ளார். சில திரைப்படங்கள் இவருக்காகவே கதை அமைத்திருக்கின்றன. நடிகராகவும் வலம் வந்த வைகை புயல் வடிவேலு இன்று அவரது 60-வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரது ரசிகர்கள், மீம் கிரியேட்டர்ஸ் அவருக்கு சமூகவலைதளத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மீம் கலைஞர்களின் தொழிலே வடிவேலை வைத்து தான் என்று சொல்லலாம். நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களுக்கும் அவரின் காமெடிகள் பொருந்தி விடுகிறது. #HappyBirthdayVadivelu என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *