பீகாரில் ஒரு மாதத்திலேயே அடித்துச்செல்லப்பட்ட பாலம்..! எவ்வளவு செலவில் கட்டப்பட்டது தெரியுமா?

பீகாரில் கடந்த மாதம் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைத்த ஆற்றுப் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள இந்த பாலம் ரூ.260 கோடி செலவில் 1.4 கிமீ நீளத்திற்கு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாட்னா, ஜூலை-16

பீகாரின் கந்தக் ஆற்றில் 1.4 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள சத்தார் காட் மகாசேத்து பாலம் கடந்த ஜூன் மாதம் 16ம் தேதியன்று பயணிகளுக்கு திறந்து விடப்பட்டது. இந்தப் பாலத்தை மாநில முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைத்தார். இது பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால் ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த புதிய பாலத்தின் ஒரு பகுதி மழையால் சரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சாம்பாரனுக்கும் இடையேயான ஒரே முக்கிய இணைப்பாக இருந்த இந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *