லலிதா ஜுவல்லரி: தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்!!!

அக்டோபர்-10

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த கொள்ளையர் சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியின் பின்பக்க சுவரை துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்த விவாகரத்தில் திருவாரூரில் மணிகண்டன் என்பரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த லலிதா ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான 5 கிலோ எடையுள்ள நகைகளை மீட்டனர். அப்போது அவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சீராதோப்பு சுரேஷ் என்பவர் தப்பிச் சென்றார்.
இந்நிலையில் திருவண்ணாமலை, செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டுவரும் நிலையில் காவல்துறையின் கையில் சிக்காமல் சீராதோப்பு சுரேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *