கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு.. கறுப்பர் கூட்டம் செந்தில் வாசன் கைது
கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியது தொடர்பான புகாரின் அடிப்படையில் அதன் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, ஜூலை-15

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் மற்றும் இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரிக்கின்றனர் என்பது புகார். ஆகையால் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து அமைப்புகள் போலீசில் புகார் கொடுத்திருந்தன. இதனையடுத்து கந்த சஷ்டி குறித்த விமர்சனத்துக்காக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவை நீக்கியது. இந்த நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் நிர்வாகி சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதனிடையே கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான செந்தில் வாசனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட செந்தில் வாசனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.