ஒரேநாளில் 2 கலெக்டர்களுக்கு கொரோனா..!
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜூலை-15

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தற்போது தமிழகத்தில் அரசு அதிகாரிகள், காவல்துறையினர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து தாக்குகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.