பொறியியல் கலந்தாய்வுக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.. அமைச்சர் கே.பி அன்பழகன்

பொறியியல் படிப்புக்கு இன்று மாலை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை-15

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.பி. அன்பழகன், நடப்பு ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்துள்ளார். மேலும், ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.

பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக 52 உதவி மையங்கள் அமைக்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்பும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வரிசுகளுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், சான்றிதழ்களை சரிபாக்க தமிழகம் முழுவதும் 52 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அமைக்கப்படும். அக்டோபர் 15-ம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 465 கல்லூரிகள் உள்ளன. பொறியியல் மாணவர் சேர்க்கை இடங்கள் குறித்த அறிவிப்பு பிறகு வெளியிடப்படும்.

கல்லூரிகள் பலவும் தனிமைப்படுத்தும் மையங்களாக இருப்பதால் தற்போதைக்கு கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் பொறியியல் கலந்தாய்வு குறித்த அடுத்தக்கட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *