தமிழகத்தில் ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 47-ஆயிரத்தை கடந்தது.

சென்னை, ஜூலை-14

தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,099 -ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 97-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 4,743 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97,310-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,078 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,662-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 67 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,099-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 2 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *