தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம்!

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை நகைக்கடன் வழங்கக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-14

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்புக்கு அரசு எவ்வித காரணமும் கூறப்படவில்லை. ஆனால் நகைக்கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும்படி மட்டுமே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கூட்டுறவு வங்கி மற்றும் சங்கத்துக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் சிலர் வங்கி ஊழியரிடம் திடீரென நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *