சாதிவாரி கணக்கெடுப்பு- மோடியிடம் ராமதாஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி, அக்டோபர்-10

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாஸ் சந்தித்து பேசினார்.

அதிமுக-பா.ஜ.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் இடம்பெற்ற பா.ம.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. அதேநேரம், அதிமுகவுடனான கூட்டணி ஒப்பந்தத்தின்படி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தாலும், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் ராமதாஸ் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் உடனிருந்தார். அப்போது, தமிழகத்தில் சாதி வாரியாக கண்கெடுப்பு நடத்தவேண்டும் என்று மோடியிடம் ராமதாஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *