இந்தியாவில் 9 லட்சத்தை தாண்டியது, கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,06,752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 23,727 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,71,460 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லி, ஜூலை-14

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 28,498 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து 9,06,752 ஆக உள்ளது. 5,71,460 பேர் குணமடைந்துள்ள நிலையில் 3,11,565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23,727 பேர் (கடந்த 24 மணி நேரத்தில் 553 பேர்) உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,60,924 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,44,507ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,482ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,798.   குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 92,567. தற்போது 48,196 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் 1,13,740 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *