முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை.. தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, ஜூலை-14

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தது. பரிசோதனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றினை கண்டறிய, இதுவரை தமிழ்நாடு முழுவதும் 105 பரிசோதனை மையங்களை ஏற்படுத்தி, நேற்று வரை 15 லட்சத்து 85 ஆயிரத்து 782 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மாண்புமிகு முதல்வருக்கும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.7.2020 அன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. மேலும், முதல்வரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *