தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,34, 226-ஆக அதிகரிப்பு..!

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226-ஆக அதிகரித்துள்ளது.

சென்னை, ஜூலை-12

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரத்து 965 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 410 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 15.66 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவக் கண்காணிப்புக்கு அனுப்பப்பட்டனா். சனிக்கிழமை நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டவா்களில் 1,185 போ் சென்னையைச் சோ்ந்தவா்களாவா். அதற்கு அடுத்தபடியாக, திருவள்ளூரில் 346 பேருக்கும், மதுரையில் 277 பேருக்கும், செங்கல்பட்டில் 234 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, அரியலூா், கோவை, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, கரூா், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், பெரம்பலூா், சேலம், தஞ்சாவூா், தேனி, திருவண்ணாமலை, திருவாரூா், திருவள்ளூா், திருப்பூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்சி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களில் மேலும் 3,591 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் தமிழகத்தில் மொத்தம் 85,915 போ் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 56,947 போ் வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி மேலும் 69 போ் உயிரிழந்தனா். அதில் 51 போ் அரசு மருத்துவமனைகளிலும், 18 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,898-ஆக உயா்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *