தேசிய அளவில் பணக்கார கட்சி திமுக!!!

அக்டோபர்-10

2017-18-ம் ஆண்டுக்கான பணக்கார மாநில கட்சி பட்டியலில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, தி.மு.க. முந்தியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள தேசிய, மாநில அரசியல் கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய சொத்து விவரம், வரவு-செலவு கணக்கு உள்ளிட்டவற்றை தாக்கல் செய்யவேண்டும்.

அதன் அடிப்படையில் கிடைக்கும் புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்களை ஆண்டுதோறும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்தங்களின் சங்கம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் 2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு விவரங்களை அந்த சங்கம் வெளியிட்டுள்ளது.

2017-18 ஆண்டு 41 மாநில கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,320.06 கோடியாக இருந்துள்ளது. ரூ.583.28 கோடி சொத்து மதிப்பினை பெற்று தேசிய அளவில் பணக்கார கட்சி பட்டியலில் சமாஜ்வாடி கட்சி முதல் இடத்தில் உள்ளது.  

அடுத்தபடியாக பணக்கார மாநில கட்சி பட்டியலில் தி.மு.க. 2-வது இடத்தை பிடித்துள்ளது. 2016-17-ம் ஆண்டு தி.மு.க.வின் சொத்து மதிப்பு ரூ.183.36 கோடியாக இருந்தது.  2017-18-ம் ஆண்டு ரூ.191.64 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2016-17-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 4.5 சதவீதம் அதிகம்.

அதனைதொடர்ந்து 3-வது இடத்தில் அ.தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு கடந்த 2016-17-ம் ஆண்டு ரூ.187.72 கோடியாக இருந்தது. தற்போது அ.தி.மு.க.வின் சொத்து மதிப்பு 2017-18-ம் ஆண்டு ரூ.189.54 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-18-ம் ஆண்டுக்கான பணக்கார மாநில கட்சி பட்டியலில் அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி, தி.மு.க. முந்தியிருக்கிறது.

பா.ம.க. உள்ளிட்ட சில மாநில கட்சிகளின் சொத்து மதிப்பு குறைந்திருக்கிறது. கடந்த 2016-17-ம் ஆண்டில் பா.ம.க.வின் சொத்து மதிப்பு ரூ.2.63 கோடியாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு ரூ.2.59 கோடியாக குறைந்திருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு கடந்த 2016-17-ம் ஆண்டு சொத்து மதிப்பு ரூ.67 லட்சமாக இருந்தது, 2017-18-ம் ஆண்டு 87 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இது கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 28.5 சதவீத உயர்வு ஆகும்.

இதேபோல மதச்சார்பற்ற ஜனதாதளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளின் சொத்து மதிப்பு 2 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *